திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு

தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்கு தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாகத் தான் கூறவில்லை என...

News image
Updated On :15 அக்டோபர் 2018, 7:16 am

தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்கு தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாகத் தான் கூறவில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்துக்கு அடுத்ததாக தேவர் மகன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் கமல் அறிவித்தார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் படத்தலைப்புக்கு சில விமரிசனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் குறித்து கமல் கூறியதாவது:

தேவர் மகன் படத்தின் அடுத்தப் பாகத்துக்குத் தேவர் மகன் 2 எனப் பெயர் வைப்பதாக நான் கூறவில்லை. தேவர் மகனின் அடுத்தப் பாகத்துக்கான பெயர் இன்னமும் வைக்கப்படவில்லை. நான்  சாதிக்கு எதிரானவன். என் படம் சாதிக்கு எதிரானது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.