போட்டி திரையில் மட்டும்தான்: தனுஷுக்கு சிம்பு வாழ்த்து!
நம்முடைய போட்டி திரையில் மட்டும்தான். சமூகவலைத்தளங்களில் அல்ல. என்னுடைய ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களும்...


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - வடசென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் படம் இன்று வெளியானதையொட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. ட்விட்டரில் அவர் கூறியதாவது:
தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என் ரசிகர்கள் மற்றும் என் சார்பாக வாழ்த்துகள். நம்முடைய போட்டி திரையில் மட்டும்தான். சமூகவலைத்தளங்களில் அல்ல. என்னுடைய ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களும் நல்ல படங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...