
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 3-ஆவது படைப்பாக 2.0 உருவாகி வருகிறது. இதில் நாயகியாக எமி ஜாக்சன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவுற்ற நிலையில், முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மேக்கிங் விடியோக்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 13-ம் தேதி டீசர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 2.0 டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







