பிக்பாஸ் சீசன் 1 புகழ் ஜூலியின் புது அவதாரம்!

சமீபத்திய புதுக்கதை பிக்பாஸ் 1 ஜூலி அம்மனாக  நடிக்கவிருப்பது தான். படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜூலிக்கு இத்திரைப்படத்தில் இரு வேடங்கள் என்று தகவல்
பிக்பாஸ் சீசன் 1 புகழ் ஜூலியின் புது அவதாரம்!
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் சீசன் 1 புகழ் ஜூலியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிக்பாஸ் சீசன் 1 ல் பல லட்சம் பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று ஓவியா பிரபலமடைந்ததைப் போல பல லட்சம் தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து பிரபலமானவர் ஜூலி. ஜுலி, பிக்பாஸுக்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டம் வாயிலாக தமிழர்களிடையே பிரபலமடைந்திருந்த போதும் அப்போது அவர் மீது மக்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டில் ஈட்டிய புகழைக் கொண்டு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி.. பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் பக்கா செயற்கைத் தனமாக இருந்ததால் அவர் குறித்த வெறுப்புணர்வு பார்வையாளர்களிடையே வெகுவாக அதிகரித்தது. ஆயினும் அதற்கெல்லாம் ஜூலி அசந்து போகவில்லை. போட்டியில் இருந்து அதன் நிறைவுப் பகுதியின் நெருக்கத்தில் வெளியேற்றப்பட்ட ஜூலி அதன் பின்னும் தொடர்ந்து மீடியா வாய்ப்புகளைப் பெற்று பிஸியாகவே இருந்து வருகிறார். 
 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சூட்டோடு நடன இயக்குனர் கலா, கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கி வரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். அதோடு தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வந்த ஜூலி, நீட் தேர்வு மதிப்பெண் குறைவின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் தற்கொலை செய்து கொண்டவரான மாணவி அனிதா நினைவாக எடுக்கப்படவிருக்கும் திரைப்படமொன்றில் அனிதாவாக நடிக்கத் தேர்வானார். அதற்கான போஸ்டர்கள் முன்பே வெளியாகின. இதெல்லாம் பழைய கதை. சமீபத்திய புதுக்கதை பிக்பாஸ் 1 ஜூலி அம்மனாக  நடிக்கவிருப்பது தான். படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜூலிக்கு இத்திரைப்படத்தில் இரு வேடங்கள் என்று தகவல். அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் ஜூலி நடிக்கிறார். இப்படத்தின் பாடல்களை அம்மன் பாடல்களைப் பாடுவதற்காகவே நேர்ந்து விடப்பட்டவர் என்று கருதப்படும் பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் இயக்குனர் மகேஸ்வரன். கேசவ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் இத்திரைப்படத்தை தயாரிப்பது சந்திரஹாசன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com