மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்ட படம் இது! 

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படம் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'.

News image
Updated On :8 செப்டம்பர் 2018, 6:03 am

DIN

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படம் ’ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. ஆதவா, அவந்திகா, மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அழகுராஜ்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய தாதாவின் உதவியை நாடிச்செல்கிறான் காதலன். அந்த தாதா நாயகனை எப்படியெல்லாம் தன் சூழ்நிலைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் கதை.

தாதாவுடன் காதலியை தேடி காதலன் செல்கிறார். காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதியில் காதலியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது? என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே படம். வரும் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வருகிறது. ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன், இசை லியாண்டர் லீ மார்டின், தயாரிப்பு விகாஷ் ரவிச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.