விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரவுள்ளன. நாளை சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா வெளியாகிறது. அடுத்த வாரமே ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் செப்டம்பர் 27-ல் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படம் அக்டோபர் 4 அன்று வெளியாகவுள்ளது.
இப்படி அடுத்த நான்கு வாரங்களும் பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளிவரத் திட்டமிட்டுள்ளன. ஒவ்வொரு பெரிய நடிகரின் படங்களுக்கும் குறைந்தபட்சம் இரு வாரங்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று திரையுலகினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இந்த நான்குப் பெரிய படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. இதனால் இந்தப் படங்களின் வியாபாரத்துக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது வரும்வாரங்களில்தான் தெரியவரும்.
அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்கள்
சீமராஜா - செப்டம்பர் 13
சாமி - செப்டம்பர் 20
செக்கச் சிவந்த வானம் - செப்டம்பர் 27
96 - அக்டோபர் 4.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


