சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அதிகாலைக் காட்சி ரத்தானபிறகு 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான சீமராஜா!

இன்று வெளியான இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் படத்தயாரிப்பாளருக்கு இருந்த பணப்பிரச்னைகள்...

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்துள்ள படம் - சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இன்று வெளியான இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் படத்தயாரிப்பாளருக்கு இருந்த பணப்பிரச்னைகள் காரணமாக படத்தின் கேடிஎம் வழங்கப்படவில்லை. இதனால் காலை 5 மணிக் காட்சி ரத்தானது. விடிய விடிய இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் ஒரு தீர்வு உருவாகி, காலை 8 மணிக்கு படத்தின் முதல் காட்சி ஆரம்பமானது. இதனால் காலை 5 மணிக்காட்சிக்கு ஆவலுடன் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். தூக்கத்தைத் தியாகம் செய்து அதிகாலையில் திரையரங்குக்கு வந்தது மட்டுமல்லாமல் ரத்தான காட்சிக்கான டிக்கெட் கட்டணத் தொகையை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உடனடியாகப் பெறமுடியாது. 

தமிழகம் முழுக்க 525க்கும் அதிகமான திரையரங்குகளில் சீமராஜா படம் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.