/

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்

வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் தேர்ட் ஐ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம்...

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 8:42 am

நடிகர் விக்ரம் நடித்துள்ள தேர்ட் ஐ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் தேர்ட் ஐ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் உருவாகியுள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தக் குறும்பட வெளியீடு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. குறும்படத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வெளியிட்டார். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என்று வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசினார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.