அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
முதன் முறையாக 3 கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதை மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்றார்.

இந்நிலையில், ஐஏஆர்ஏ விருது பெற்றதற்காக நடிகர் விஜய்-க்கு, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். திரைத்துறையில் விஜய்-யின் ஆரம்ப காலகட்டத்தில் செந்துரப்பாண்டி திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் அவருடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


