தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

‘ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கை கருத்தரிப்பின் மூலம் லண்டனில் பிறந்த மகன் நான்!’ என்று உரிமை கோரும் இளைஞர்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாய் என்று ஆந்திராவைச் சேர்ந்த 29-வயது இளைஞர் ஒருவர் கூறி தன்னை தன் தாயுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

Published On :

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாய் என்று ஆந்திராவைச் சேர்ந்த 29-வயது இளைஞர் ஒருவர் கூறி தன்னை தன் தாயுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கை கருத்தரிப்பின் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தவர் என்று கூறியுள்ளார். தன்னை 3-வயது வரை ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் அவர்கள் வளர்த்ததாகவும் பின்னர் மும்பையில் இருந்து ஆந்திராவிற்குத் தனது வளர்ப்புத் தந்தை ஆதித்தியா ராய் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் ஏப்ரல் 2017-ல் இறந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார் (உண்மையில் அவர் இறந்தது மார்ச் மாதத்தில்).

“நான் என் அம்மாவைச் சந்திக்க கூடது என்று 27 வருடங்களாக என் உறவினர்கள் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர், மேலும் நான் ஐஸ்வர்யாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அழித்து விட்டார்கள், இப்போது என் தாய் தனது கணவன் அபிஷேக் பச்சனை பிரிந்து தனியாக வாழ்கிறார், தனிமையில் வாடும் என் அம்மாவிற்கு ஆதரவாக இருக்கவே நான் விரும்புகிறேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Story image

அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டால், 1988-ம் ஆண்டில் ஐஸ்வர்யாவின் வயது 15 மட்டுமே, அப்படிப் பார்த்தால் 14-வயதிலேயே அவர் கர்ப்பம் அடைந்திருக்க வேண்டும். மேலும் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இந்த இளைஞர் ஒருவேளை அவரது தீவிர ரசிகராக இருக்கலாம் இப்படி ஏதாவது செய்தால் ஐஸ்வர்யா ராயை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தச் செய்தியை பரவ விட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ராகேஷ் ஓம்பிரகாஷ் அவரின் ‘ஃபன்னே கான்’ என்னும் நகைச்சுவை படத்திற்கான ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.