நான் ஒரு செருப்பு பைத்தியம்! இப்படிச் சொன்னது யார் தெரியுமா?!

இவரது இந்தி மெகா சீரியல் ஒன்று ‘மாயா’ என்ற பெயரில் தமிழில் பாலிமர் சேனலில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அதற்கு கல்லூரிப் பெண்களிடையே நல்ல வரவேற்பு.
நான் ஒரு செருப்பு பைத்தியம்! இப்படிச் சொன்னது யார் தெரியுமா?!
Published on
Updated on
2 min read

ஜெனிஃபர் விங்கெட்டைத் தெரியுமா உங்களுக்கு? ஜீ தமிழ், பாலிமர் சேனல்களில் ஒளிபரப்பாகும் மொழிமாற்றம் செய்யப்பட்ட வட இந்திய மெகாசீரியல்களை விடாது பார்த்து ரசிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இவரைத் தெரிந்திருக்கும். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகளில் இவருக்கு முக்கியமான இடமுண்டு. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சினிமாவை விட்டு விலகி சின்னத்திரையில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காரணம் பெரிய திரையைக் காட்டிலும் பாலிவுட்டில் சின்னத்திரை இவருக்கு அதிகமான பிரபல்யத்தையும் பணத்தையும் ஈட்டித் தருவதால் அம்மணி சின்னத்திரையே போதும் என செட்டிலாகி விட்டார்.

இவரது இந்தி மெகா சீரியல் ஒன்று ‘மாயா’ என்ற பெயரில் தமிழில் பாலிமர் சேனலில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அதற்கு கல்லூரிப் பெண்களிடையே நல்ல வரவேற்பு. தொடர் பாப்புலர் ஆனதோ இல்லையோ மாயாவாக நடித்த ஜெனிஃபர் விங்கெட் பெண்களுக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவராகி விட்டார். தொடரில் இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் தான் என்றாலும் அழகான முகத்தால் வெறுப்பவர்களையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் ஜெனிஃபருக்கு இருந்தது.

ஜெனிஃபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நிகழ்ந்த  ஃபோட்டோ ஷூட் ஒன்றிலிருந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் அதற்கு அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த வரவேற்பு மட்டுமல்ல பாராட்டுகளும் குவிந்திருக்கின்றன.

ஜெனிஃபரிடம் ஒரு வினோதமான பழக்கமுண்டு. அவருக்கு டிஸைனர் ரேஞ்சில் வாட்சுகள், கைப்பைகள் சேகரிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. பிரபல பிராண்ட் ஷூக்களைச் சேகரிப்பதென்றால் மட்டும் கொள்ளை ஆசை! அவரது வீட்டில் ஒரு அறையையே இதற்கென ஒதுக்கியிருக்கிறார் ஜெனி. அறை முழுக்க விதம் விதமான ஷூக்களையும், செருப்புகளையும் மட்டுமே உங்களால் காண இயலும். பிரபல பிராண்ட் ஷூக்களுக்காகவோ அல்லது செருப்புகளுக்காகவோ விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினால் முதலில் அதை தான் அணிந்து பார்த்து பயன்படுத்திப் பார்த்து திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அந்தப் பொருளை விளம்பரப் படுத்தவே முன் வருவேன் என்பதை ஒரு பாலிஸியாகவே பின்பற்றி வருகிறாராம். இப்போ தெரிந்திருக்குமே ஒரு அறை முழுக்க செருப்புகள் ஏன் வந்தன என்று?

ஜெனிஃபர் விங்கெட் என்ற பெயரைப் பார்த்ததுமே எல்லோரும் இவரை ஹாலிவுட் நடிகையெனச் சிலர் தப்பர்த்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால், இவர் ஒரு பியூர் இந்தியப் பெண். அம்மா மராட்டி, அப்பா மகாராஷ்ட்ரியன். ஜெனிஃபர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியின் ‘பெபானா’ தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com