25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியை முந்திய நடிகை இவர்தான்!

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவர்.

Published On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவர். முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முதன்முதலில் நடித்த படம் 'ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை’. அதன் பின்னர் பல இந்திப் படங்கள், மற்றும் சில தென்னிந்தியப் படங்களில் நடித்துள்ளார். தற்போது குவாண்டிகோ (Quantico) எனும் ஆங்கில வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சென்ற இடமெல்லாம் பேரும் புகழுமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியாங்காவின் கொடி தற்போது இன்னும் உயரப் பறக்கத் தொடங்கியுள்ளது.

Story image

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிக் பி அமிதாப் பச்சன் ஆகியோரை விட பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது.

Story image

பிசி (PeeCee) என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரியங்கா சோப்ராவின் ஃபேன் பாலோவர்கள் 2.5 கோடி நபர்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளதா! இந்தச் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரியங்கா. 

Story image

நீண்ட காலமாக சிங்கிளாக இருந்த பிரியங்கா, அண்மையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜொனாஸுடன் டேட்டிங்கில் உள்ளார் என்ற தகவல் பரவியது. மும்பையில் கடந்த ஜூன் 28-ம் தேதி முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு இவர்கள் இருவரும் ஜோடியாக வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர். 

Story image

பிரியங்கா சோப்ரா அடுத்து அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ‘பாரத்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் சல்மான் கான், திஷா படானி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையொட்டி  வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.