டாட்டூ மோகத்தால் டாப்லெஸ் போஸ் தந்து பரபரப்புக் கிளப்பும் நடிகை!

வலது இடுப்புப் பகுதியில்க் வரையப்பட்டுள்ள இந்த டாட்டூவுக்கு பால்ட்வின் அளித்துள்ள சிறப்புப் பட்டப் பெயர் ‘சம்மர் டைம்’.
டாட்டூ மோகத்தால் டாப்லெஸ் போஸ் தந்து பரபரப்புக் கிளப்பும் நடிகை!
Published on
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வினின் மகளான 22 வயது அயர்லேண்ட் பால்ட்வின் அதி தீவிரமான டாட்டூ ப்ரியை. இவரிடம் ஏகப்பட்ட டாட்டூ கலெக்‌ஷன்கள் இருக்கின்றன. உடலில் எங்கெங்கு காணினும் பாடி ஆர்ட் என்ற பெயரில் டாட்டூக்களாக வரைந்து தள்ளி அந்தக் கலையை உச்சி முகர்ந்து கொண்டாடக் கூடியவர் இவர். இவரது டாட்டு மோகத்தின் லேட்டஸ்ட் அலம்பல் என்ன தெரியுமா? உடலின் மேற்பகுதியில் வரைந்து கொண்ட சிவப்பு ரோஜா டாட்டூவை தனது ரசிகர்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சியில் துணிந்து டாப்லெஸ்ஸாக போஸ் அளித்திருக்கிறார்.

வலது இடுப்புப் பகுதியில்க் வரையப்பட்டுள்ள இந்த டாட்டூவுக்கு பால்ட்வின் அளித்துள்ள சிறப்புப் பட்டப் பெயர் ‘சம்மர் டைம்’. அதனுடன் ஒரு கத்தி, சிவப்பு ரோஜா மற்றும் இத்ய வடிவ இமோஜி வரையப்பட்டுள்ளது. லண்டன் டெய்லி மெயிலுக்கு இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படமொன்றில் இந்த பிரசித்தி பெற்ற டாட்டூவுடன் காட்சியளிக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த ஒற்றை ஆடை பிகினி பாட்டம் மட்டுமே என்கிறது டெய்லி மெயில். இவருக்கு இப்படி ஒரு டாட்டூ வரைந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருப்பவரான டாட்டூ கலைஞர் கான்ஸ்டாண்டின் நாஸ்கஸின் பெயரை மறக்காமல் தனது புகைப்படத்துடன் டேக் செய்துள்ளார். இதற்குப் பெயர் தான் நன்றி மறவாமையோ?!

அயர்லேண்ட் பால்ட்வினின் உடலிலுள்ள வேறு சில புகழ்பெற்ற டாட்டூ வரிசையைப் பாருங்கள்... டேவிட் பெளவி, ஹலோ கிட்டி மற்றும் கிண்ணம் நிறைய ராமென் நூடுல்ஸ் ருசித்துக் கொண்டிருக்கும் சின்னப் பெண் இத்யாதி.. .இத்யாதி என பல டாட்டூக்கள் முன்னதாக அவரது உடலை அலங்கரித்துக் கொண்டிருக்கையில் இப்போது இந்த சிவப்பு ரோஜா வேறு! டாட்டூ போட்டுக் கொள்வதற்காகவே உயிர் வாழ்கிறார் போலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com