ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

போனி கபூரின் ‘சால்பாஸ்’ திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்கவிருப்பது யார்?

தீபிகா, ஃபாராகான் இயக்கத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க ஒப்புக் கொண்டால் ஒரே இயக்குனரின் மூன்று திரைப்படங்களில் நாயகியான பெருமை அவருக்கு கிடைக்கக் கூடும்.

News image
Updated On :2 ஜூலை 2018, 2:48 pm IST

நடிகை ஸ்ரீதேவி மறைந்து மாதங்கள் கடந்து கொண்டிருந்தாலும் அவரைப் பற்றிய உரையாடல்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் ஏதாவதொரு வகையில், திரைப்படத்துறையில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் தனது பெயர் மூலமாக ஸ்ரீதேவி இன்றும் தன் ரசிகர்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், தன் மனைவியின் நடிப்பில் வெளிவந்து அன்றைய நாட்களில் சக்கைப்போடு போட்ட வெற்றித்திரைப்படங்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து மீண்டும் ரீமேக் செய்யும் எண்ணத்திலிருக்கிறாராம். முதற்கட்டமாக ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த  ‘சால்பாஸ், ரூப்கி ராணி ஷோரன் க ராஜா; ஜான்பாஸ், மிஸ்டர் இந்தியா’ உள்ளிட்ட திரைப்படங்களை ரீமேக் செய்யவிருப்பதாகத் தகவல். அதில் முதலில் ரீமேக் ஆகவிருப்பது, ஸ்ரீதேவி இருவேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிய சால்பாஸ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்கவிருப்பவர் நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறி பல வெற்றிப்படங்களை அளித்து வரும் ஃபாராகான் எனக் கூறப்படுகிறது. படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க ‘பத்மாவத்’ புகழ் தீபிகா படுகோன் அணுகப்பட்டிருக்கிறார்.

தீபிகா, ஃபாராகான் இயக்கத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க ஒப்புக் கொண்டால் ஒரே இயக்குனரின் மூன்று திரைப்படங்களில் நாயகியான பெருமை அவருக்கு கிடைக்கக் கூடும். ஏனெனில், முன்பே ஃபாராகான் இயக்கத்தில் ஓம் சாந்தி ஓம், ஹேப்பி நியூ இயர் என இரு திரைப்படங்களில் தீபிகா நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சால்பாஸிலும் நடித்தார் என்றால் ஹாட்ரிக் சாதனை அடித்து விடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.