நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீனாவில் வசூலில் சாதனை நிகழ்த்தும் அந்தாதுன் படம்!

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள அந்தாதுன் என்கிற ஹிந்திப் படம் சீனாவில் வசூலில் சாதனை செய்துவருகிறது...

News image
Updated On :16 ஏப்ரல் 2019, 7:17 am

எழில்

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள அந்தாதுன் என்கிற ஹிந்திப் படம் சீனாவில் வசூலில் சாதனை செய்துவருகிறது. 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம் சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 13-வது நாளில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. ஏப்ரல் 3 அன்று சீனாவில் பியானே பிளேயர் என்கிற பெயரில் வெளியானது. 

சீனாவில் வெளியான ஹிந்திப் படங்களில் டங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பஜ்ரங்கி பைஜான், ஹிந்தி மீடியம் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக அதிக வசூலை அடைந்துள்ளது அந்தாதுன். விரைவில் ஹிந்தி மீடியம் படத்தின் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த வருடம்  அக்டோபர் மாதம் வெளியான அந்தாதுன் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தியாவில் அடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.