தேசிய விருது: சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் - பாரம்!
66-வது திரைப்படத் தேசிய விருதுப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது...


ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 66-வது திரைப்படத் தேசிய விருதுப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தேசிய விருதுப் பட்டியல்:
சிறந்த படம் - எல்லாரு (குஜராத்தி)
சிறந்த இயக்குநர் - ஆதித்யா தர் (உரி, ஹிந்தி)
சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)
சிறந்த நடிகர் - ஆயுஷ்மா குரானா (அந்தாதுன், ஹிந்தி), விக்கி கெளசல் (உரி, ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி (மராத்தி)
நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது - ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)
சிறந்த பொழுதுபோக்குப் படம் - பதாய் ஹோ (ஹிந்தி)
சமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - பானி (மராத்தி)
சிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக், மராத்தி)
சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ, ஹிந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பிவி ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரேஷி (உருது), ஸ்ரீனிவாஸ் போக்லே (மராத்தி)
சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் (பத்மாவத், ஹிந்தி)
சிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி, கன்னடம்)
சிறந்த வசனம் - தரிக் (வங்காளம்)
சிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன்
சிறந்த அசல் திரைக்கதை - சி அர்ஜூன் லா சோ (தெலுங்கு), அந்தாதுன் (ஹிந்தி), தரிக் (வங்காளம்)
சிறந்த ஒலி அமைப்பு - டெண்ட்லியா (மராத்தி), உரி (ஹிந்தி), ரங்கஸ்தலம் (தெலுங்கு)
சிறந்த படத்தொகுப்பு - நதிசரமி (கன்னடம்)
சிறந்த கலை இயக்கம் - கம்மர சம்பவம் (மலையாளம்)
சிறந்த ஒப்பனை - ஏவ் (தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத், ஹிந்தி)
சிறந்த பின்னணி இசை - ஷஸ்வத் சச்தேவ் (உரி, ஹிந்தி)
சிறந்த பாடலாசிரியர் - மனசோர் (நதிசரமி, கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த நடனம் - க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி, ஹிந்தி)
திரையுலகுக்கு ஏற்ற மாநிலம் - உத்தராகண்ட்
சிறப்பு விருதுகள்: ஹெல்லாரோ (குஜராத்தி), கெடாரா (வங்காளம்), ஸ்ருதி ஹரிஹரன் (கன்னடம்), சந்திரசூர் ராய் (ஹிந்தி), ஜோஜோ ஜார்ஜ் (மலையாளம்), சாவித்ரி (மலையாளம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: மகாநடி (தெலுங்கு)
சிறந்த சண்டை இயக்கம் - கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: எம்.ஜே. ராதாகிருஷ்ணன் (மலையாளம்)
சிறந்த குழந்தைகள் படம் சர்காரி...((SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU, கன்னடம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...