மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விக்ரன் மகன் பாடிய பாடல்!

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள எதற்கடி வலி தந்தாய் என்கிற பாடலை துருவ் பாடியுள்ளார். விவேக் எழுதியுள்ள இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 5:38 am

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம்  தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் உருவாகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இசை - ரதன், தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள எதற்கடி வலி தந்தாய் என்கிற பாடலை துருவ் பாடியுள்ளார். விவேக் எழுதியுள்ள இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.