மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீபாவளியன்று விஜய்யின் பிகில் படத்துடன் போட்டியிடவுள்ள படங்கள்!

இந்த வருடப் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் வெளியாகி, இரண்டும் வசூலை அள்ளியதால்...

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 8:59 am

எழில்

இந்த வருடப் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் வெளியாகி, இரண்டும் வசூலை அள்ளியதால் தீபாவளிக்கும் இதே நிலைமை தொடரவுள்ளது. அந்தச் சமயத்தில் பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்துடன் போட்டியிட இன்றைய தேதியில் குறைந்த மூன்று படங்களாவது போட்டியில் உள்ளன. 

தனுஷ் நடிக்கும் பட்டாஸ், கார்த்தி நடிக்கும் கைதி, விஷால் நடிக்கும் ஆக்‌ஷன் என இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. பொங்கலுக்கு வெளியான இரு படங்களுமே வசூலில் குறை வைக்காததால் இனி பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை வந்தாலும் சவாலை சமாளிக்கமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிகில் உள்ளிட்ட நான்குப் படங்களுமே வெளிவர வாய்ப்பில்லையென்றால் குறைந்தபட்சம் மூன்று படங்களாவது வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.