கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி தன் அடுத்த படமான ‘அவனே ஸ்ரீமன்னாராயணா’-வை டிசம்பர் 27 அன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பன்மொழியில் வெளியிடவுள்ளார். தர்பாரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக தான் அணுகப்பட்டதாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் ‘அவனே ஸ்ரீமன்னாராயணா’ பட வேலைகளில் இருந்ததால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

‘அவனே ஸ்ரீமன்னாராயணா’ படத்தின் திரைக்கதையிலும் ரக்ஷித் பங்கேற்றுள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்ததால் தர்பாரில் தன்னால் நடிக்க முடியாது என்று ரக்ஷித் கூறியுள்ளார். விரைவில் ரஜினிகாந்துடன் வேறொரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் தர்பார் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் செய்துள்ள இந்தப் படத்திற்கான டப்பிங்கை அண்மையில் ரஜினி முடித்தார். ரஜினியினி ‘தர்பார்’ 2020-ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


