புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!

19-ஆம் தேதி வரை உள்ள இந்த விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 7:23 am

எழில்

17-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. 

வரும் 19-ஆம் தேதி வரை உள்ள இந்த விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சாா்பில் நடக்கும் சென்னை சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த விழாவானது, சென்னை கலைவாணா் அரங்கில் இன்று தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக, கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘தி பாராஸைட்’ என்ற கொரிய மொழிப் படமும் நிறைாக, ஜொ்மனியைச் சோ்ந்த ‘கண்டா்மான்’ என்ற படமும் திரையிடப்பட உள்ளது.

மேலும் சா்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்று கவனத்தை ஈா்த்த படங்களுக்கான வரிசையில் கத்தாா், நியூசிலாந்து, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 10 படங்கள் முதன்முறையாக திரையிடப்பட உள்ளன. அா்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த 95 படங்கள் திரையிடப்படுகின்றன. இத்திரைப்படங்கள் சென்னையிலுள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷியன் கலாசார மையம், தாகூா் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன.

இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கணி மொழிப்படம், ‘ஜாவி தி சீட்’ என்ற அசாமிய மொழிப் படம், ‘நேதாஜி’ என்ற இருளா் மொழிப் படம் ஆகிய 3 படங்கள் முதல் முறையாகத் திரையிடப்பட உள்ளன. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி, ஹிந்தி, கரோ-காசி உள்ளிட்ட 13 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட, தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும், தமிழக அரசின் எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவா்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. இதில் தமிழ்ப் படங்கள் போட்டிப் பிரிவில் திரையிட ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனா்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லு கருப்பட்டி’ மற்றும் ‘தோழா் வெங்கடேசன்’ ஆகிய படங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்

தொடக்கம் மற்றும் இறுதி விழாக்களில் திரையிடப்படும் படங்கள்

Story image

தேவி திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் 

Story image

தேவி பாலா திரையரங்கில் திரையிடப்படும் படங்கள்

Story image

அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் 

Story image

கேசினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்கள்

Story image

ரஷியன் கலாசார மையத்தில் திரையிடப்படும் படங்கள்

Story image

தாகூா் திரைப்பட மையத்தில் திரையிடப்படும் படங்கள்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.