ஹீரோ படத்தின் 18 நிமிட பின்னணி இசை: ஆர்வத்தை உண்டு பண்ணிய படக்குழுவினர்

ஹீரோ படம் தான் நான் இசையமைத்த பின்னணி இசைகளிலேயே சிறந்தது என எனக்கு யுவன் குறுஞ்செய்தி அனுப்பினார்... 
ஹீரோ படத்தின் 18 நிமிட பின்னணி இசை: ஆர்வத்தை உண்டு பண்ணிய படக்குழுவினர்
Updated on
1 min read

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. 

சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் 18 நிமிட பின்னணி இசை ஒன்றை வழங்கியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அதைப் பற்றிப் பேசி ஆர்வத்தை உண்டு பண்ணியுள்ளார்கள்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசியதாவது: ஹீரோ படத்தில் 18 நிமிடக் காட்சி ஒன்றுக்கு பின்னணி இசையை வழங்கியுள்ளேன். இந்தியப் படங்களில் 18 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பிஜிஎம் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல்முறை என எண்ணுகிறேன். ஹீரோ படத்தின் மூலமாக சூப்பர் ஹீரோ படங்கள் பல பாகங்களாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

சிவகார்த்திகேயன் பேசும்போதும் இந்த பிஜிஎம் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசியதாவது: யுவன், பிஜிஎம்-மில் கிங். என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் அவருடைய பாடல்கள் கேட்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. அவரை யாரும் தொட முடியாது. பலவகையான பாடல்களை அளித்துள்ளார். ஹீரோ படத்தில் வருகிற 18 நிமிட பிஜிஎம் இசையைக் கேட்க ஆவலாக உள்ளேன். 

ஹீரோ படம் தான் நான் இசையமைத்த பின்னணி இசைகளிலேயே சிறந்தது என எனக்கு யுவன் குறுஞ்செய்தி அனுப்பினார். எனக்கு இதைக் கேட்டு பரவசமானது. நா. முத்துக்குமாருடன் இணைந்து அவர் இசையமைத்த பாடல்கள், மறக்க முடியாதவை என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com