ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது. இந்த வருட நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையிலான 13 பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் 10 நிகழ்ச்சிகளை சல்மான் கான் தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக் பாஸின் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பு அவருக்கு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 6.5 கோடி வழங்கப்பட்டதாகவும் தற்போது அவருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 8.5 கோடி வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஒரு பிக் பாஸ் சீஸனைத் தொகுத்து வழங்குவதன் மூலம் ரூ. 200 கோடியை சம்பளமாகப் பெறுகிறார் சல்மான் கான்.
இந்நிலையில் பிக் பாஸை விட்டு விலகுவது குறித்து யோசிப்பதாக சல்மான் கான் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று என்னுள் ஒரு பகுதி கோரிக்கை விடுக்கிறது. ஆனால் என்னுடைய இன்னொரு மனம், தொடர்ந்து செய் என்கிறது. இது கடும் உழைப்பைக் கோருகிறது. ஆனால் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். நாடு எங்கே செல்கிறது, நம் மதிப்பீடுகளின் நிலை என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். பிரபலங்களின் மூலம் இதை அறிந்துகொள்கிறோம். ஆனால் பிக் பாஸ் அரங்கை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பிக் பாஸ் இல்லத்தின் சூழல் அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது என்று கூறியுள்ளார்.
ஜனவரியில் முடிவதாக இருந்த இந்த வருட ஹிந்தி பிக் பாஸ், தற்போது 5 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரியில் முடியவுள்ளது. ஆனால் பட வேலைகளால், பிக் பாஸ் நிகழ்ச்சியை அவ்வளவு நாள்கள் தொகுத்து வழங்குவது கடினம் என்று கூறியிருக்கிறார் சல்மான். எனவே அந்த 5 வாரங்களையும் ஃபரா கான் தொகுத்து வழங்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


