தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஸ்வாசம் படத்துக்குத் தமிழ்நாட்டில் கிடைத்த வசூல்: தயாரிப்பாளர் அளித்த அதிகாரபூர்வத் தகவல்!

வெளியீட்டின்போது கடும்போட்டி அமைந்தாலும் விஸ்வாசம் படத்துக்குத் தொடக்க வசூல் அபாரமாக அமைந்தது...

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 7:32 am

எழில்

அஜித் - இயக்குநர் சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்த படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்தார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம்  ஜனவரி 10-ம் தேதி வெளியானது. 

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வரை வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் குறித்துக் கூறியதாவது:

படம் அசுர வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 125 கோடி முதல் ரூ. 130 கோடி வரை வசூலித்துள்ளது. இதில் விநியோகஸ்தர்களின் வாழ்நாள் பங்கு எப்படியும் ரூ. 70 கோடி முதல் ரூ. 75 கோடி வரை இருக்கும்.  எந்த ஒரு அளவுகோலிலும் இது மகத்தான சாதனை. படத்தின் உள்ளடக்கம் குடும்ப ரசிகர்களை ஈர்த்தது. தக்க சமயத்தில் படம் வெளியானது. கிட்டத்தட்ட 600 திரையரங்கில் வெளியானதால் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. வெளியீட்டின்போது கடும்போட்டி அமைந்தாலும் விஸ்வாசம் படத்துக்குத் தொடக்க வசூல் அபாரமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

விஸ்வாசம் படம் அமேஸான் பிரைமில் வரும் திங்களன்று (பிப்ரவரி 25) வெளியாகவுள்ளது. படம் வெளிவந்த 46-வது நாளன்று இணையத்தில் வெளியாவதால் திரையரங்கில் படம் பார்க்காதவர்களுக்குத் தற்போது படம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.