‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...

வர்ஷா போலம்மா டப்ஸ்மாஷ் மூலமாகத்தான் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறாராம். நஸ்ரியா நடித்திருந்த ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து இணையத்தில் வெளியிட
‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...
Published on
Updated on
1 min read

96 திரைப்படத்தில் திரிஷாவைத் தாண்டியும் ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர்களில் முதலாமவர் இளம் வயது த்ரிஷாவாக நடித்தவர் அல்ல. படத்தில் டிராவல் ஃபோட்டோகிராபராக நடித்திருந்த விஜய் சேதுபதியிடம் இண்டெர்ன்சிப் டிரெய்னிங் எடுத்துக் கொள்ளும் பொருட்டு மாணவியாக அறிமுகமாவாரே ஒரு இளம்பெண் அவருக்குத்தான் திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள் முளைத்தார்கள். அந்தப் பெண்ணின் பெயரை அத்திரைப்படத்தில் ஒரே ஒருமுறை தான் விஜய் சேதுபதி அழைப்பதாக காட்சி இருக்கும். அந்தக் காட்சி எது என்பது படத்தை சீன் பை சீனாக நுணுக்கமாகப் பார்த்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும். அந்த அளவுக்கு படத்தை ரசித்து ரசித்துப் பார்த்த அந்தப் பெண்ணின் பெயரைக் கண்டுபிடித்து புளகாங்கிதமடைந்த ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். காரணம் அந்தப் பெண்ணிடம் நடிகை நஸ்ரியாவின் சாயல் நிறைய இருந்த காரணத்தால் என்று சிலர் சொல்கிறார்கள். படத்தில் ஒரு சில சீன்கள் மட்டுமே வந்து செல்லும் அந்தப் பெண்ணை பலருக்குப் பிடித்துப் போனது அவருடைய லக் என்று தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் படத்தின் நாயகியைத் தாண்டியும் இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாக வாய்ப்பேது? 

அந்த வர்ஷா போலம்மா டப்ஸ்மாஷ் மூலமாகத்தான் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறாராம். நஸ்ரியா நடித்திருந்த ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து இணையத்தில் வெளியிட அப்படி வந்தது தான் 2015 ஆம் ஆண்டில் வெளியான சதுரன் திரைப்பட வாய்ப்பு. அப்போது கவனம் பெற முடியவில்லை என்றாலும் 96 ல் வர்ஷாவுக்கு நல்ல வரவேற்பு. இதோ அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது டோலிவுட் பிரபல இயக்குனர் ராஜ கந்துகுரியின் வாரிசான சிவா கந்துகுரிக்கு ஜோடியாக அவரது அறிமுகப்படுத்தில் இணையவிருக்கிறார் எனத் தகவல்கள் கூறுகின்றன. ராஜ் கந்துகுரி ‘பெல்லி சூப்புலு’ என்றொரு மாற்று சினிமாவை டோலிவுட்டுக்கு அளித்ததின் மூலம் அங்கே பெரிதாக வரவேற்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரானார். அவரது மகனின் அறிமுகப்படத்தில் வர்ஷா நாயகியாகியிருப்பது டோலிவுட்டில் அவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com