தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

கேஜிஎஃப் ஹீரோ யஷ்ஷுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... அதென்ன தெரியுமா?

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் யஷ்ஷுக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. அதென்ன தெரியுமா? சூப்பர் ஸ்டார் திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பு கர்நாடக போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றியவர்.

Updated On :

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழித்திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆஃபீஸில் அதகளம் செய்து வரும் கேஜிஎஃப் (கோலார் தங்க வயல் (Kolar Gold FIELDS) திரைப்படம் இதுவரை குவித்துள்ள தொகை அபாரம். சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கே ஜி எஃப் 1 திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆஃபீஸில் 152 கோடியையும் தாண்டி வசூலை அள்ளி வருகிறது. அதுமட்டுமல்ல திரைப்படம் வெளிவந்து 1 வாரம் கடந்த நிலையிலும் படத்துக்கான வரவேற்பு இன்னும் ஓயவில்லை. இப்போதும் தியேட்டர்களில் ஃபுல் லோடாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தின் நாயகன் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 

கே ஜி எஃப் படத்தின் வெற்றி பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜீரோ திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருப்பதை வைத்து யஷ், ஷாரூக்கை பின்னுக்குத் தள்ளி விட்டாரா? என்றொரு கேள்வி செய்தியாளர்களால் யஷ்ஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரளித்த பதில்;

இல்லை... ஷாரூக் பல்லாண்டுகளாக நடித்துக் கொண்டிருப்பவர். அவருடைய அனுபவத்திற்கு முன் நான் ஒன்றும் இல்லை. இன்றைக்கு கேஜிஎஃப் வெற்றிகரமாக ஓடுகிறதென்றால் காரணம் கதை மக்களுக்குப் பிடித்திருக்கிறது. இப்படியான கதைகள் வந்தால் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்றே நான் உணர்கிறேனே தவிர இந்த வெற்றியை என்னுடையது மட்டுமே என்று என்னால் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் இதில் பலரது கூட்டு முயற்சி இருக்கிறது. அவ்வளவு தான் என்கிறார்.

கன்னடத்தில் பிரபல ஆக்‌ஷன் ஹீரோவாகக் கலக்கி வரும் யஷ்ஷுக்கு தமிழில் இது மிகச்சிறந்த துவக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கான நன்றியை யஷ், நடிகர் விஷாலுடன் பகிர்ந்து கொள்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலமாகத்தான் கேஜிஎஃப் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது இவ்விடத்தில் முக்கியமான செய்தி.

கன்னட நடிகரான யஷ், கேஜிஎஃப் க்கு முன்பு மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி, கஜகேசரி, மொக்கின மனசு உள்ளிட்ட 19 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் ஒன்றிரண்டு திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களாக அமைந்திருந்தாலும் மொக்கின மனசுக்குப் பிறகு யஷ் கவனிக்கத்தக்க இளம் ஹீரோக்களில் ஒருவராகி விட்டார் என்கிறது சாண்டல்வுட் வட்டாரம். இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவெனில் யஷ், மிஸ்டர் & மிஸஸ் ராமாச்சாரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் உடன் நடித்த நாயகி ராதிகா பண்டிட் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்று சில ஆண்டுகள் கிசுகிசு எழுதப்பட்டு வந்தது. இருவரும் அதை மறுத்தார்களோ இல்லையோ நான்காண்டுகளுக்குள் திருமணமே செய்து கொண்டார்கள். இப்போது இந்த நட்சத்திரத் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உண்டு.

யஷ் என்பது திரைப்பெயர் மட்டுமே. இவரது இயற்பெயர் நவீன்குமார் கெளடா என்கிறது விக்கிபீடியா.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் யஷ்ஷுக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. அதென்ன தெரியுமா? சூப்பர் ஸ்டார் திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பு கர்நாடக போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றியவர். அதே போல யஷ்... இல்லையில்லை... யஷ்ஷின் அப்பா அருண்குமார் கர்நாடக போக்குவரத்து துறையில் ஓட்டுனராகப் பணியாற்றியவர். யஷ் பிரபல ஹீரோவான பின்னும் தனது வேலையை விடாமல் கர்நாடகப் பேருந்துகளில் ஓட்டுநராக நீடித்திருந்தவர். அந்த வகையில் தன் தந்தை குறித்து தனக்கு மிகுந்த பெருமை உண்டு என்கிறார் யஷ்.

Related Article

சர்வம் தாளமயம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சூர்யா - கே.வி. ஆனந்த் இணையும் ‘காப்பான்’! இரு போஸ்டர்கள் வெளியீடு!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் காலமானார்

மதுரை வீரனை அருந்ததியராகவே காட்டுவதில் யாருக்கென்ன நஷ்டம்?!

வெளியானது அஜித்தின் 'விஸ்வாசம்'  ட்ரைலர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.