தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடடே, ஆச்சர்யக்குறி!: விரைவில் வெளியாகவுள்ள ‘என்ஜிகே’ பட டீசர்!

கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின்...

News image
Updated On :26 ஜனவரி 2019, 7:38 am

எழில்

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள்.

கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

என்ஜிகே படத்தின் வெளியீடு மட்டுமல்லாமல் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியீடு போன்றவையும் தாமதமாவது குறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதி வருகிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில், பாடல்கள் அற்புதமாக உள்ளன. உங்களுக்கு அவற்றை வழங்க ஆவலாக உள்ளேன், ஆனால் எப்போது என்று கேட்கவேண்டாம் என எழுதினார். இன்னொரு ட்வீட்டில், என்ஜிகே படம் குறித்து நீங்கள் ஆவலாக உள்ளீர்கள் எனத் தெரியும். ஆனால் படம் வெளிவரும்வரை நம் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துவோம். படம் குறித்த தகவல்களை கசிய விடவேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டீசர் தேதி அறிவிப்பு என்ஜிகே படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.