மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா?: கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்!

ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்...

News image
Updated On :13 ஜூலை 2019, 9:15 am

எழில்

கடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தன்னுடைய நண்பரும் மறைந்த தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை. இரு கால்களையும் பிடித்துக்கொண்டு, தலையை அழுத்தி தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே உயிரிழக்க முடியும் என்று உமாதாதன் கூறியதாக ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். 

இந்நிலையில் ரிஷிராஜ் சிங்கின் கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் பதில் அளிக்கத் தேவையில்லை. அடிப்படையில் ஒருவரின் கற்பனை இது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.