சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிக் பாஸ் அதிர்ச்சி: சரவணன் பேச்சைக் கண்டிக்காத கமல்; கைத்தட்டிய ரசிகர்கள்!

கடந்த சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... 

News image
Updated On :29 ஜூலை 2019, 6:05 am

எழில்

கடந்த சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் - நடிகை மீரா மிதுன் தொடர்புடைய விவாதம் ஒன்று நடைபெற்றது. அப்போது மீராவுக்கு அறிவுரை வழங்கிய கமல், இப்படிப் பார்த்தால் பேருந்துகளில் நெரிசலில் போகவே முடியாது. அங்கு யாரும் வேண்டுமென்று இடிக்கமாட்டார்கள். (அதேசமயம்) பெண்களை உரசுவதற்கென்றே பேருந்தில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றார். 

அப்போது நடிகரும் போட்டியாளர்களில் ஒருவருமான சரவணன் கையைத் தூக்கினார். 

அப்போது கமல், அத்தகையவர்களை சரவணன் பிடித்து நாலு போடு போட்டிருப்பார் என நினைக்கிறேன் என்றார். 

ஆனால் சரவணன், நான் கல்லூரியில் படிக்கும்போது அதைச் செய்துள்ளேன் என்றார். 

கமலும் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயய்யோ என்றார் கமல். சரவணனின் பேச்சுக்கு பெண்கள் உள்ளிட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அதையும் தாண்டி அவர் புனிதம் ஆயிட்டார் என்றார் கமல். 

பேருந்துகளில் பெண்களை உரசும் செயல்களைக் கல்லூரிக் காலங்களில் தான் செய்துள்ளதாக சொன்ன சரவணனின் பேச்சை கமல் கண்டிக்காதது ஏன்? சரவணனின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது ஏன்? இது நடந்தாலும் அந்தச் சம்பவத்தை விஜய் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பியது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.