இதுதான் விஜய் 64 படக்குழு பட்டியலா?
இப்படம் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...


பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது தற்போதைக்கு விஜய் 64 என்று குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் நடிகர்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா என இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், அர்ஜூன் போன்றோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படத்தைத் தயாரித்துள்ள சேவியர் பிரிட்டோ, விஜய் நடிக்கும் இப்படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகலாம் என்றும் அறியப்படுகிறது.
இப்படம் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...