இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

'டுலெட்' நாயகன் நடிக்கும் புதிய படத்தின் வித்யாசமான தலைப்பு இதுதான்!

பல சர்வதேச விருதுகளை அள்ளிய டுலெட் படத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.

Published On :31 ஜனவரி 2024, 3:11 pm IST

பல சர்வதேச விருதுகளை அள்ளிய டுலெட் படத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். இவர் கவிஞர் விக்ரமாதித்யனின் மகன். விக்ரமாதித்யன் இலக்கிய வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவர். நான் கடவுள், ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சந்தோஷ் கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவீணா சந்தோஷ் நம்பிராஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார். வட்டார வழக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுரேஷ் மணியன், படத்தொகுப்பு வெங்கட்ராஜ். இப்படத்தை K.S.ஸ்டுடியோ சங்கர் மதுரா டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.

மதுரையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தப் படம் அவ்வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மனித நேயத்தையும் வாழ்க்கையையும் இயல்பாக சொல்லும்விதமாக இக்கதை இருக்கும் என்றனர் படக் குழுவினர். சமயநல்லூர், சித்தாலங்குடி உள்ளிட்ட பல பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. நல்ல படங்களுக்கான இடத்தை என்றும் ரசிகர்கள் தர மறுப்பதில்லை. வட்டார வழக்கு படம் என்பதாலும், மதுரையை மையமாக கொண்ட கதை என்பதாலும் இப்படத்துக்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.