/

பிரபல பேட்மிண்டன் வீராங்கனையுடன் புகைப்படம் பகிர்ந்த கோலிவுட் ஹீரோ: மீண்டும் திருமணமா? 

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை  பிரபல கோலிவுட்  நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:05 am

DIN

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை பிரபல கோலிவுட்  நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். பின்னர் குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011-ல் திருமணம் செய்த விஷ்ணு விஷால், கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

பிறகு தன்னுடன் 'ராட்சசன்' படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் மறுத்தார்.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’  படங்களை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Story image
Story image

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட இரு ‘செல்பி’ படங்களை அவர் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படங்களின் கீழே வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை.

அதேநேரம் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இருவரும் பதிலளிக்கவில்லை. குறிப்பாக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூட, இது என்ன திரைப்படமா? என்றுகேட்ட கேள்விக்கு, 'நான் நடிகை இல்லை அஷ்வின்' என ஜூவாலா கட்டா பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.