சீனாவில் 56,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள 2.0 படம்!
சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது...


ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2.0 படம் சீனாவில் பெரிய அளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 12 அன்று 56000 திரையரங்குகளில் 2.0 படம் சீனாவில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்கள்.
சீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப் படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளன. இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...