நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு

பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். 
நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு
Updated on
1 min read

பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com