ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள ‘அர்ஜூன் ரெட்டி’ ஹிந்தி ரீமேக்!

கடந்த வாரம் வெளியான கபீர் சிங், வசூலில் எதிர்பாராத அளவுக்குச் சாதனை படைத்து வருகிறது...

News image
Updated On :26 ஜூன் 2019, 10:53 am

எழில்

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

அர்ஜூன் ரெட்டி படம் கபீர் சிங் எனத் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. பிரபல நடிகர் சாஹித் கபூர் கதாநாயகனாகவும் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.  தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் வங்கா, ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான கபீர் சிங், வசூலில் எதிர்பாராத அளவுக்குச் சாதனை படைத்து வருகிறது. முதல் மூன்று நாள்களில் இந்திய முழுக்க நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் (வரி நீங்கலாக) ரூ. 20 கோடிக்கும் மேலாக வசூலித்த கபீர் சிங், திங்களன்று ரூ. 17.50 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது. நேற்றும் கிட்டத்தட்ட ரூ. 17 கோடி வரை வசூலித்து ரூ. 100 கோடி என்கிற இலக்கை எட்டியுள்ளது. இந்த வசூலை 5-ம் நாளிலேயே எட்டி சாதனை படைத்துள்ளது.

2019-ம் வருடம் அதிக வசூலித்த ஹிந்திப் படம் - உரி. ரூ. 245 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 2019-ல் வெளியான பாரத், கேசரி, டோட்டல் தமால், கல்லி பாய் போன்ற பெரிய ஹிந்திப் படங்களை விடவும் நல்ல வசூலை அடைந்து வருவதால் உரி படத்தின் வசூலை கபீர் சிங் விரைவில் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.