

சிரஞ்சீவி நடிக்கும் சை ரா நரசிம்ம ரெட்டி படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, அனுஷ்கா போன்றோரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடித்தபோது அனுஷ்காவுக்குக் காயம் ஏற்பட்டதாகவும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை அனுஷ்கா மறுத்துள்ளார்.
நான் நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக உள்ளேன். சியாட்டிலில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
சைலன்ஸ் என்கிற மாதவன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்றுள்ளார் அனுஷ்கா. ஹேமந்த் மதுகர் இயக்கும் இப்படத்தில் அஞ்சலியும் நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.