சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

‘ரெளடி பேபி’ பாடலின் மேக்கிங் விடியோ வெளியீடு!

இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்தார்கள்... 

News image
Updated On :2 மார்ச் 2019, 6:47 am

எழில்

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்தார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்தார்கள். 

பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள்  பெற்ற பாடல் என்கிற சாதனையையும் சமீபத்தில் அடைந்தது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 175 மில்லியன் பார்வைகளும் 183 பார்வைகளும் பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைத் தாண்யது ரெளடி பேபி பாடல். 

தற்போது யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 262 மில்லியன் அதாவது 26 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. எந்தவொரு தமிழ்ப் பாடலும் இதுவரை அடையாத எண்ணிக்கை இது. இந்நிலையில் இப்பாடலின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு வரவேற்பு பெற்று புதிய சாதனைகளைப் படைக்கப்போகிறதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.