நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்கள் முன்பு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். திருமணத் தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று (16 மார்ச்) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். அர்ஜுன் ரெட்டி, பெல்லி சொப்புலு போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பின்புதான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் உறுதி எடுத்திருந்தார். கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியிடப்படும் என்கிறது விஷால் தரப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


