விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தொடர்ந்து இதுபோல செயல்பட்டால்...: ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை!

பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல இரட்டை அர்த்த வசனங்களையும் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாக...

News image
Updated On :25 மார்ச் 2019, 7:53 am

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பெண்களைக் கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களைக் கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதைத் தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக இணையத்தள நேர்காணல்களிலும் பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல இரட்டை அர்த்த வசனங்களையும் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். 

தொடர்ந்து இதுபோல செயல்பட்டால் திரைத்துறையில் தங்களுக்கு ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்யவேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.