அரசியல்வாதிகளை போட்டுத் தாக்கும் யோகிபாபுவின் 'தர்மபிரபு' பட டீஸர்
நகைச்சுவை நடிகர் யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தர்மபிரபு' பட டீஸர் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளது.


சென்னை: நகைச்சுவை நடிகர் யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தர்மபிரபு' பட டீஸர் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
ஸ்ரீவாரி ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு' .நகைச்சுவை நடிகர் யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருடன் கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் 'தர்மபிரபு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.
இதில் 'அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா...', 'அக்கவுண்டில் பணம் போடுறேன்னு சொல்லிட்டு ட்ரெஸ்ஸா போட்டுக்கிருக்கானா?' என்றெல்லாம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன
இவ்வாறு சமகால தமிழக அரசியலையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்யும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ள டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...