விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திரையுலகில் 17 வருடங்கள் நிறைவு: தனுஷ் உருக்கம்!

இந்த இலக்கில்லா, அவனால் நட்சத்திரமாக அல்ல, ஒரு நடிகனாகக்கூட முடியுமா என்று தெரியாத சிறுவனுக்கு நேற்றுதான் நீங்கள் ஆதரவளித்தது போல உள்ளது...

News image
Updated On :10 மே 2019, 12:16 pm

எழில்

துள்ளுவதோ இளமை படம் வெளிவந்து 17 வருடங்கள் ஆனதையொட்டி தனுஷுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

அருமை நண்பர்களே, 

துள்ளுவதோ இளமை 2002, மே 10 அன்று வெளியானது. என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். நிஜமாகவே 17 வருடங்கள் ஆனதா? 

இந்த இலக்கில்லா, அவனால் நட்சத்திரமாக அல்ல, ஒரு நடிகனாகக்கூட முடியுமா என்று தெரியாத சிறுவனுக்கு நேற்றுதான் நீங்கள் ஆதரவளித்தது போல உள்ளது. 

என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றியுணர்ச்சி பொங்குகிறது. என்னுடைய நல்ல, கெட்ட நேரங்கள், வெற்றி, தோல்விகளில் எனக்கு ஆதரவாக இருந்துள்ளீர்கள். 

நான் மிகச்சரியான மனிதன் அல்லன், ஆனால் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவு - மேலும் என்னை உழைக்க வைத்து முழுத் திறமையை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. 

17 வருட நிறைவையொட்டி நீங்கள் அனுப்பியுள்ள போஸ்டர்களும் விடியோக்களும் அதிக ஊக்கத்தையும் நேர்மறை எண்ணங்களையும் அளித்துள்ளன. அன்பை மட்டும் அனைவருக்கும் பகிர்வோம். நம்மைப் போன்றவர்கள் அதிகம் கனவு காணக்கூடிய உலகைப் படைப்போம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.