மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷால் நடித்த அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை: காரணம் என்ன?

அயோக்யா படத்தைத் தெலுங்குத் தயாரிப்பாளரான மது தயாரித்துள்ளார். இந்தப் படம் ரூ. 37 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது...

News image
Updated On :10 மே 2019, 5:31 am

வெங்கட் மோகனின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் - அயோக்யா. 

2015-ல் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக் தான் அயோக்யா. இந்தப் படம் ஹிந்தி ரீமேக் ஆக, சிம்பா என்கிற பெயரில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி அதிக வசூலை அடைந்தது. 

அயோக்யா படத்தைத் தெலுங்குத் தயாரிப்பாளரான மது தயாரித்துள்ளார். இந்தப் படம் ரூ. 37 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஹிந்தி டப்பிங் உரிமத்தில் சிக்கல் ஆகியுள்ளது. டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமம் பெற்றவர் ஹிந்தி டப்பிங் உரிமத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளதால் அது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இதையடுத்து நேற்றிரவு ஃபிலிம் சேம்பரில் இந்தப் படத்தின் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு எட்டப்படாததால் இன்று அயோக்யா படம் வெளியாகவில்லை. 

விஷால் இந்தப் படம் தனக்குப் பெரிய திருப்பத்தை உருவாக்கும் என எண்ணினார். ஆனால் படம் வெளியாகாததால் வருத்தத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தான் பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் படம் வெளிவருவதிலேயே சிக்கல் உருவாகியிருப்பது தமிழ்த் தயாரிப்பாளர்களிடையே ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.