
94 ல் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவர் ஐஸ்வர்யா ராய். அழகியென்றாலும் கூட அதுவரை உலகில் வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அளவுக்கு உலகம் முழுவதுமே ஒருவிதமான கொண்டாட்டமான வரவேற்பும், அங்கீகாரமும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது. இன்றும் கூட பெண்களின் அழகு குறித்து கேலி செய்ய வேண்டுமென்றால், ஆமா ’ அவ பெரிய ஐஸ்வர்யா ராய் பாரு’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது இந்த சமூகம். அந்த அளவுக்கு இந்தியாவின் குக்கிராமங்களிலும் கூட தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் ‘ஐஸ்’. அப்படிப் பட்ட ஐஸ்வர்யாவைப் பிரதி எடுத்தது போல இன்னொரு பெண் இருந்தால் எப்படி இருக்கும்? ‘உலகினில் உன் போல ஒருவரும் இல்லை’ இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை’ என்று அந்நியன் திரைப்படத்தில் பாடல் வரியொன்று வரும். அதுபோல ஐஸ்வர்யாவைப் பிரதி எடுத்துக் கொண்டு பிறக்க வேண்டுமென்றால் அது அவரது மகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதோ ஈரானியன் மாடல் ஒருவர் அப்படியே அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார்.
அந்த ஈரானியன் மாடலின் பெயர், மலாகா ஜாபேரி (Mahlagha Jaberi). பார்க்க ஐஸ்வர்யாவின் ஒட்டிப் பிறந்த தங்கை மாதிரி இருக்கிறார். போதாக்குறைக்கு ஐஸ்வர்யாவின் வார்ட்ரோப் கலெக்ஷனுடன் மலாகாவின் ரசனையும் ஒத்துப் போகிறது.
ஒரே மாதிரியான ஆடைகளுடன் இருவரையும் ஒப்பிட்டுக் காட்டும் சில புகைப்படங்கள் மலாகாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அத்தகைய புகைப்படங்களில் ஒன்றை ஐஸ்வர்யாவும் கூட தனது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக்குடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்துள்ளதாகத் தகவல்.
பாலிவுட்டில் தற்போது இப்படி ஒரு ட்ரெண்டிங் வலம் வரத் தொடங்கியுள்ளது. நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்டோர் சர்வதேச அளவில் தங்களைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட மாடல் கம் நடிகைகளைத் தேடிக் கண்டடைந்து அவர்களை புகைப்பட ஆதாரங்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். எதற்கு என்றால்? சும்மா ஒரு திரில்லுக்குத் தான். உலத்தில் ஏழு பேர் ஒரே மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள் இல்லையா? அப்படி நம்மைப் போலவே இருப்பவர்களைக் காணும் சந்தர்பம் வாய்த்தால் நமக்கு நிச்சயம் திரில்லாக இருக்கும் தானே!
அந்த வகையில் உலகில் அதிகம் கொண்டாடப்படும் அழகி ஐஸ்வர்யாவுக்கும் ஒரு குளோனிங் சிஸ்டர் கிடைத்து விட்டார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.