அரசியல் நையாண்டிக்குப் பிரசித்தி பெற்ற  'கன்னட எம் ஆர் ராதா' காலமானார்!

கன்னட நாடகம் மற்றும் திரையுலகில் அரசியல் நையாண்டி நிறைந்த தைரியமான நகைச்சுவைக்குப் பெயர் போனவர் ஹிரனையா. அதற்காகவே அவரை கன்னடர்கள் கொண்டாடுகிறார்கள்.
அரசியல் நையாண்டிக்குப் பிரசித்தி பெற்ற  'கன்னட எம் ஆர் ராதா' காலமானார்!

கன்னடத் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் தியேட்டர் நாடகக் கலைஞருமான மாஸ்டர் ஹிரனையா இன்று காலாமானார். அவருக்கு வயது 85. கல்லீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹிரனையா நேற்று மைசூர் BGS  குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என கன்னட ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மைசூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி எனும் தியேட்டர் நாடகக் கலைஞர் மற்றொரு பிரபல தியேட்டர் நாடகக் கலைஞரான கே. ஹிரனையாவின் மகன். ஹிரனையா தனது மகனை தன் பெயரிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது நாடகங்களில் அரங்கேறச் செய்தார். ஹிரனையா தொடங்கிய நாடக சபையின் பெயர் ‘ ‘கே ஹிரனையா மித்ர மண்டலி’  இந்த சபா அரங்கேற்றிய நாடகமொன்றில் மாஸ்டர் ஹிரனையா என்ற பெயரில் அறிமுகமானார் ஹிரனையா அலைஸ் நரசிம்ம மூர்த்தி. இதோ மரணம் தன்னை அணைக்கும் வரையிலும் அவரது பெயர் மாஸ்டர் ஹிரனையாவே தான். 

கன்னட நாடகம் மற்றும் திரையுலகில் அரசியல் நையாண்டி நிறைந்த தைரியமான நகைச்சுவைக்குப் பெயர் போனவர் ஹிரனையா. அதற்காகவே அவரை கன்னடர்கள் கொண்டாடுகிறார்கள். தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஹிரனையா ஏற்ற் நடத்திய நாடக மன்றத்தை அடுத்தபடியாக தற்போது அவரது மகன் பாபு ஹிரனையா நிர்வகித்து வருகிறார். 60 களில் இவரது பிரசித்தி பெற்ற நாடகமாக விளங்கியது ‘லஞ்சாவதாரா’. 1959 முதல் தொடர்ந்து 11,000 முறைகளுக்கும் மேலாக மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் 6 தலைமுறைகளாக மேடையேற்றப்பட்ட பிரசித்தி பெற்ற அரசியல் விமர்சன நாடகமாகப் புகழ்பெற்று விளங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com