நான் காதலிக்கும் நபர் யார்?: ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி!
சக நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...


சக நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
என் காதல் கதை குறித்த வதந்திகளை நான் கேள்விப்படுகிறேன். அவர் யார் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தவும். அப்படி ஏதாவது நடந்தால் முதல் ஆளாக உங்களுக்குச் சொல்வேன். நான் இன்னும் சிங்கிள் ஆகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லக்ஷ்மி, சாமி 2, செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா ஆகிய படங்கள் வெளியாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...