விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய 58-வது படம். தற்போது ஆர்எஸ் விமல் இயக்கி வரும் மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
96 படத்தை விநியோகம் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோவின் லலித் குமார் விக்ரம் - அஜய் ஞானமுத்து படத்தைத் தயாரிக்கவுள்ளார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...