புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மே 23 அன்று மீண்டும் பிரதமர் ஆவார், அடுத்த நாளன்று படம் வெளியாகும்: மோடி குறித்து விவேக் ஓப்ராய் பெருமிதம்!

தில்லியிலும் மும்பையிலும் இந்தப் படம் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் அதிகளவில்...

News image
Updated On :22 மே 2019, 12:17 pm

எழில்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வருவதால் இத்திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மின்னணு ஊடகங்களில் எந்த கட்சி அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த தடையை விதித்தது. பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கியுள்ளார்.

மே 23 அன்று மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவார். அடுத்த நாளன்று பி.எம். நரேந்திர மோடி படம் வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் விவேக் ஓப்ராய். தில்லியிலும் மும்பையிலும் இந்தப் படம் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு தந்தார். மோடிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.