/

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஆர்.ஜே.பாலாஜி?

90-களின் முற்பகுதியில் தொடங்கி, 'அம்மன் படங்கள்' வகைமைக்கு கோலிவுட்டில் தனி மவுசு இருந்து வருகிறது

News image

rj balaji and nayanthara

Updated On :11 நவம்பர் 2019, 7:18 am

90-களின் முற்பகுதியில் தொடங்கி, 'அம்மன் படங்கள்' வகைமைக்கு கோலிவுட்டில் தனி மவுசு இருந்து வருகிறது. கே.ஆர்.விஜயாவில் தொடங்கி, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் வரை அம்மன் வேடத்தில் ஜொலித்த நடிகைகள் பலர் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படும் நயன்தாரா. 

ஆர்.ஜே.பாலாஜி முதன் முதலாக இயக்குனராக களம் இறங்கியுள்ள படமிது. இது ஒரு பக்தி படம் என்பதை விட நக்கல், நையாண்டி, சென்டிமெண்ட் என நிகழ் உலகின் பல விஷயங்களைப் பகடி செய்யும் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது புதிய படம் குறித்த செய்தியை சமூக ஊடகங்களில் அறிவித்த ஆர்.ஜே.பாலாஜி, 'இதோ - முக்குத்தி அம்மன்! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் ..! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.! நான் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி என்.ஜே.சரவணனுடன் இயக்குகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

என்.ஜே.சரவணனுடன் இணைந்து அவர் இயக்கவிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். கெளதம் மேனனின் அடுத்த படமான ஜோஷ்வாவைத் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் மூக்குத்தி அம்மனை தயாரிக்கிறார்கள். மேலும் ரிலீஸ் பிரச்னைகளில் சிக்கியிருத 'எனை நோக்கி பாயும் தோட்டாவை’யும் நவம்பர் 29-ம் தேதி இவர்கள் வெளியிடவுள்ளனர்.

இதற்கிடையில், சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்து ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் அவள் படப் புகழ் மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.