பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள்: பாரதிராஜா கோரிக்கை

இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன....

News image
Updated On :23 நவம்பர் 2019, 12:42 pm

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு கட்டடத்தைப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அந்தக் கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாகத்துக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இளையராஜாவின் நீண்டகால நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களைத் தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வாகும். ஆகையால் அவர் மீண்டும் இசைப்பணிகளை அங்குத் தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நவம்பர் 28 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்று கூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.