ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருமணம் தொடர்பான வதந்தி: யோகி பாபு, நடிகை சபீதா விளக்கம்

நடிகை சபீதா ராயை பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

News image
Updated On :27 நவம்பர் 2019, 12:23 pm

DIN

நடிகை சபீதா ராயை பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து நடிகை சபீதா ராய் கூறியதாவது:

யோகி பாபு கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிற பொண்ணு என்று பரவிய வதந்தியில் இடம்பெற்றது நான் தான். எனக்குச் சிரிப்பதா, அழுவதா, கோபப்படுவதா... எப்படி எதிர்வினையாற்றவேண்டும் என்று தெரியவில்லை. இந்தச் செய்தி வதந்தி என யோகி பாபு மறுப்பு தெரிவித்துவிட்டார். 2017-ல் கன்னிராசி என்கிற படத்தில் அவருடன் நடித்தேன். ஒரு நடிகராக அவரை எனக்குப் பிடிக்கும். அந்தச் சமயத்தில் எடுத்த செல்பி தான் அது. அந்தப் புகைப்படத்தை வைத்து எங்கள் இருவருக்கும் திருமணம் என எப்படிச் செய்தி வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து அவருடன் இணைந்து நான் 3 படங்களில் நடித்துள்ளேன். இந்த வதந்தியை நம்பவேண்டாம். அவருடைய பெயரைக் கெடுக்கவேண்டாம். அவர் கஷ்டப்பட்டுக்கு இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் யோகி பாபு வெளியிட்டுள்ளதாவது: என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.