மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறார் சிவா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஜினியின் அடுத்தப் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2019, 5:18 am

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அடுத்த வருடப் பொங்கல் சமயத்தில் இப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. 

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.